Categories
சினிமா தமிழ் சினிமா

“தீ தளபதி பாடல்”…. வாரிசு படத்தின் 2-ம் சிங்கிள் வெளியீடு…. வேற லெவலில் மாஸ் காட்டும் தளபதி…..!!!!!

தளபதி நடிகர் விஜய் தெலுங்கு டிரைக்டர் வம்சி உடன் கூட்டணி சேர்ந்து இருக்கும் திரைப்படம் வாரிசு. டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் தில்ராஜு தான் இப்படத்தை தயாரித்து வருகிறார். முன்பே வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆகியிருக்கிறது. மேலும் படத்தின் சில ஸ்டில்களும் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று விஜய் திரையுலகிற்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவு செய்வதை கொண்டாடும் வகையில் வாரிசு புது அப்டேட் மாலை 6.30 மணிக்கு வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதன்படி தற்போது வாரிசு படத்தின் 2ஆம் சிங்கிள் அப்டேட்தான் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். “தீ தளபதி” என்ற இப்பாடல் டிசம்பர் 4ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்திருக்கின்றனர்.

Categories

Tech |