தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய்.இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் உருவாக்கி வரும் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்த நிலையில் படபிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் புதிய வீடு ஒன்றை விஜய் வாங்கியுள்ளார்.ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்திருக்கும் இந்த வீட்டின் விலை 35 கோடி என்று கூறப்படுகிறது.சென்னை நீலாங்கரையில் இருக்கும் வீட்டில் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வரும் விசை புதிதாக வாங்கியுள்ள இந்த வீட்டை அலுவலகமாக பயன்படுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.