நடிகர் விஜயின் ’மாஸ்டர் படம் முடிவடையும் நிலையில் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் .
விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 65’ படத்தை எந்த இயக்குனர் இயக்குவார் என்பது கோலிவுட் திரையுலக வட்டாரத்தில் கடந்த சில மாதங்களாக பெரும் கேள்வி எழுப்பி வருகிறது .
’தளபதி 65’படத்தை இயக்குனர்கள் சமுத்திரக்கனி ,அட்லீ ,பாண்டிராஜ், மோகன்ராஜா, பேரரசு, மகிழ்திருமேனி, கோமாளி பட இயக்குநர் பிரதீப் ஆகியவரின் பட்டியலை தொடர்ந்து தற்போது புதியதாக பெண் இயக்குநர் சுதாகொங்காரா இணைந்துள்ளார்.
சுதா கொங்காரா என்பவர் முன்னணி நடிகரான சூர்யா நடித்து வரும் ’சூரரைப்போற்று’ படத்தை இயக்கியுள்ளார் . இந்த படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகும் என மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சுதா கொங்காரா தனது அடுத்த படத்தின் கதையை தளபதி விஜயிடம் கூறியுள்ளதாகவும் அந்த கதை விஜய்க்கு பிடித்து இருந்தால் .’தளபதி 65’ என்ற படத்தை இயக்ககுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது . இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியான பின்பு உறுதி செய்யப்படும்.