விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 65 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 65. இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது.
இதையடுத்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் வருகிற ஜூலை மாதம் முதல் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வடபழனி குமரன் காலனியில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் இதற்கான செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே நடனமாடும் பாடல் காட்சி படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது