Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 65’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கு நடைபெறுகிறது?… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் விஜய்யின் தளபதி 65 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.

Vijay's Thalapathy 65 goes on floors in Chennai. All pics and video -  Movies News

சமீபத்தில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் தளபதி 65 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்காக பிரமாண்டமான ஷாப்பிங் மால் செட் அமைக்கும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது .

Categories

Tech |