Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 65’ படத்தின் டைட்டில் இதுதானா?… தீயாய் பரவும் தகவல்…!!!

தளபதி 65 படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 65. இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. விரைவில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.

Vijay kick-starts shooting for Thalapathy 65 in Georgia; actor's photo goes  viral - PIC INSIDE

இந்நிலையில் தளபதி 65 படத்திற்கு ‘டார்கெட்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இந்த டைட்டிலை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ‌. மேலும் வருகிற ஜூன் 22-ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாளையொட்டி தளபதி 65 படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்

Categories

Tech |