‘தளபதி 65’ படத்திற்காக சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் பிரம்மாண்ட மால் ஒன்றின் செட் போடும் பணிகள் நடைபெற்று வந்தது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இதை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் பிரம்மாண்டம் மால் ஒன்றின் செட் போடும் பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நடிகர் விஜய் ‘தளபதி 65’ படத்திற்காக செட் போடும் பணிகளை திடீரென நிறுத்த சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் செட் போடும் பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பணிகளை உடனடியாக நிறுத்தும்படியும், பாதிப்பு குறைந்த பின் செட் போட்டுக் கொள்ளலாம் என்றும் நடிகர் விஜய் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தளபதி 65 படத்திற்காக மால் செட் போடும் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.