தளபதி 65 படத்தில் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார் . மேலும் இந்த படத்தில் பிரபல நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இயக்குனர் ஜானி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தளபதி விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோர் என்னை நம்பி இந்த படத்தில் ஒப்பந்தம் செய்ததற்கு மிகப்பெரிய நன்றி . எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நான் சரியாக பயன் படுத்துவேன்’ என பதிவிட்டுள்ளார். மேலும் அவர் ஏப்ரல் 24 முதல் இந்த படத்தின் பாடல்களுக்கான ரிகர்சல் தொடங்கும் எனவும் மே 3 – 9 வரை படப்பிடிப்பு நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார் . இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.