Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 65’ படத்தில் கவின் நடிக்கிறாரா?… வெளியான புதிய தகவல்… வருத்தத்தில் ரசிகர்கள்…!!!

‘தளபதி’ 65 படத்தில் நடிகர் கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்து ஏராளமான ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் கவின். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார். மேலும் இவர் நட்புனா என்ன தெரியுமா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது கவின் நடிப்பில் லிப்ட் திரைப்படம் தயாராகி வருகிறது . இந்நிலையில் நேற்று தளபதி 65 படத்தின் பூஜையில் நடிகர் கவின் கலந்துகொண்ட புகைப்படம் வெளியாகி இருந்தது.

தளபதி 65' படபூஜையில் நடிகர் கவின்: புதிய தகவல் | Seithichurul

இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் தளபதி 65 படத்தில் கவின் நடிக்க இருப்பதாக நினைத்து உற்சாகமடைந்தனர். ஆனால் இந்த படத்தில் கவின் நடிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் நெல்சன் திலிப் குமாரின் நண்பரான கவின் இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற இருப்பதாக கூறப்படுகிறது. தளபதியுடன் இணைந்து கவின் நடிக்கிறார் என உற்சாகத்தில் இருந்த அவரது ரசிகர்கள் இந்த தகவலால் வருத்தமடைந்துள்ளனர்.

Categories

Tech |