தளபதி விஜயின் 65வது படமான தளபதி 65 திரைப்படம் ஒரு சில காரணங்களினால் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் # தளபதி 65 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்ஜியாவில் நடந்த முதல்கட்ட படப்பிடிப்பில் கதாநாயகி பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி பின்னர் குணமடைந்தார். சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.