Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 65’-ல் இணைந்த ஜானி… ஏன் மற்ற மாஸ்டர்கள் போர் அடிச்சுட்டாங்களா?… இணையவாசிகளுக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகர்…!!!

நடிகர் சாந்தனு ‘தளபதி 65’ படத்தில் ஜானி மாஸ்டர் இணைந்தது குறித்து கேள்வி எழுப்பிய ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார் .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நடிகர் சாந்தனு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் சிறிது நேரம் மட்டுமே வந்திருந்தாலும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நிறைவாக பதிவு செய்து இருந்தார். மேலும் சாந்தனு பாவ கதைகள் படத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான தங்கம் கதையில் சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். நடிகர் சாந்தனு அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தளபதி 65 படம் குறித்த ஒரு பதிவுக்கு நடிகர் சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார் .

நடிகர் விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார் . இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது . மேலும் நேற்று நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் இந்த படத்தில் இணைந்திருப்பதாக அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில் இதை பலரும் வரவேற்றதுடன் ஒரு சிலர் ஏன் ஸ்ரீதர், சதீஸ், சோபி, தினேஷ், ராஜசுந்தரம் போன்ற மற்ற மாஸ்டர்கள் போரடித்து விட்டார்களா ? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள சாந்தனு இந்த நடன மாஸ்டர்களின் நடனங்களை நாம் பல வருடங்களாக என்ஜாய் செய்து வருகிறோம். அதனால் ஜானி மாஸ்டர் மட்டுமே இப்போது திறமையானவர் என்றல்ல . அவரையும் ஊக்கப்படுத்துவோம். இதற்காக மற்றவர்களை குறைத்து மதிப்பிடவில்லை’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |