நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 65-வது படத்தின் முதற் கட்ட படபிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. இதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த படத்தை 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், படபிடிப்பு தாமதத்தால் ரிலீஸ் தேதியை மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.