Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 66’ தெறி மாஸ் அப்டேட்… 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர்…!!!

தளபதி 66 படத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் 66-வது படத்தை வம்சி இயக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருக்கிறார் ‌.

Ghilli' Duo: Thalapathy Vijay And Prakash Raj To Group Up Ag

இந்நிலையில் தளபதி 66 படத்தில் பிரகாஷ் ராஜ் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் பிரகாஷ் ராஜ் ‘பீஸ்ட் நடிகருடன் விரைவில் இணைவேன்’ என தெரிவித்துள்ளார். ஏற்கனவே கில்லி, போக்கிரி, சிவகாசி, வில்லு போன்ற படங்களில் பிரகாஷ் ராஜ் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 12 வருடங்களுக்கு பின் மீண்டும் விஜய், பிரகாஷ் ராஜ் இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |