நடிகர் விஜய்யின் அடுத்த படமான “தளபதி 66” படத்தின் டெஸ்ட் ஷூட் முடிந்துள்ள நிலையில் நாளை முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வம்சி பைடிபல்லி இயக்கும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதா நாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கியுள்ளார். தில் ராஜா இப்படத்தையும் தயாரிக்க உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் இந்த திரைப்படம் தயாராக உள்ளது.
நடிகர் விஜய் நடிக்கும் முதல் தெலுங்கு படம் இதுவாகும். பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்தைப்பற்றி அப்டேட்களும், தலைப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.