நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருப்பதாக தகவல் பரவி வந்தது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருப்பதாகவும், தில் ராஜு தயாரிக்க இருப்பதாகவும் தகவல் பரவி வந்தது.
இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை வம்சி இயக்க இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக பாடகர் கிரிஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் இயக்குனர் வம்சிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த கிரிஷ் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவதற்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டிருந்தார். ஆனால் அந்த பதிவை கிரிஷ் உடனடியாக நீக்கி விட்டார். இருப்பினும் அந்த பதிவின் ஸ்க்ரீன் ஷாட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் தளபதி 66 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.