விஜய் நடிப்பில் உருவாகவுள்ள ‘தளபதி 66’ படத்தின் கதை இணையத்தில் கசிந்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். தற்போது இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. இதை தொடர்ந்து விஜய்யின் 66-வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க இருக்கிறார். இந்நிலையில் ‘தளபதி 66’ படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது .
அதாவது விஜய் எரோடோமேனியா என்ற மனநோயால் பாதிக்கப்பட்டு, பின் அதிலிருந்து எவ்வாறு மீண்டு வருகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என தகவல் பரவி வருகிறது. எரோடோமேனியா மனநோயால் பாதிக்கப்பட்டவர் மற்றவர் தன்னை விரும்புவதாக நினைத்துக் கொள்வாராம். ஆனால் உண்மையில் அப்படி இருக்காதாம். ஏற்கனவே வம்சி இயக்கத்தில் வெளியான தோழா படத்தில் நடிகர் நாகார்ஜூனா கழுத்துக்குக் கீழ் எந்த பாகங்களும் செயல்படாத பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.