Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 66’ படத்தில் ஹீரோயின் இவர் தானா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் விஜய்யின் தளபதி 66 படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தளபதி 65 திரைப்படம் தயாராகி வருகிறது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. கொரோனா பரவல் குறைந்த பின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. இதனிடையே நடிகர் விஜய்யின் 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க இருப்பதாக தகவல் பரவி வந்தது.

Nillayo from Bairavaa, starring Vijay and Keerthy Suresh | My images,  Songs, Saree

மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் இரண்டு கதாநாயகிகளை கொண்ட கதை என்றும் அதில் ஒரு நடிகையாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய், கீர்த்தி சுரேஷ் இருவரும் பைரவா, சர்க்கார் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |