Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 66’ படத்தை இயக்கும் பிரபல தெலுங்கு இயக்குனர்… வெளியான சூப்பர் தகவல்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இதையடுத்து சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Thalapathy Vijay | Vamshi paidipally: Tollywood hit director Vamshi  Paidipally to direct Vijay in his next film?

இதனிடையே நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்குவதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் இயக்குனர் வம்சி பைடிபல்லி விஜய் படத்தை இயக்குவதை உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |