பிரபல இயக்குனர் வம்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது அடுத்த படம் குறித்து பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவரது 65-வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து விஜய்யின் 66-வது படத்தை தோழா, மஹரிஷி போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய வம்சி இயக்க இருப்பதாக தகவல் பரவி வந்தது. மேலும் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது.
https://twitter.com/Vijay66OfficiaI/status/1439407016699564033
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வம்சி பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில் வம்சி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அதை பற்றி இப்போதே தெரிவித்து சுவாரசியத்தை உடைக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். இதிலிருந்து அவர் விஜய்யுடன் இணைய இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.