தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
‘தளபதி 67’ படத்திற்கு ‘ராய்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் லோகேஷ் இயக்கும் படங்களில் எடிட்டராக பணியாற்றும் பிலோமின் ராஜின் அடுத்த படத்தின் பெயர் ‘ராய்ஸ்’ என்று அவரது விக்கிபீடியா பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து #Royce என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.