தளபதி 67 திரைப்படத்தில் மன்சூர் அலிகான் நடிப்பதாக தகவல் பரவி வருகின்றது.
தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 3ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67 இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் க்ஷகொண்டிருக்கிறார்கள்.
தமிழ் சினிமா உலகில் 90களில் வில்லனாக மிரட்டியவர் மன்சூர் அலிகான். இவர் தற்பொழுது காமெடி நடிகராகவும் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றார். லோகேஷ் தான் நடிகர் மன்சூர் அலிகானின் தீவிர ரசிகன் என பலமுறை பேட்டிகளில் கூறியிருக்கின்றார். இந்த நிலையில் தற்பொழுது இது குறித்து பேசிய லோகேஷ், மன்சூர் அலிகானுக்காக ஒரு சிறப்பான கதாபாத்திரத்தை உருவாக்கி இருப்பதாகவும் தனது அடுத்த திரைப்படத்தில் அவரை கண்டிப்பாக நடிக்க வைக்க போவதாகவும் கூறி இருக்கின்றார். இதனால் ரசிகர்கள் அனைவரும் தளபதி 67 படத்தில் விஜய்யுடன் மன்சூர் அலிக்கான் சேர்ந்து நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசிவருகின்றார்கள் குறிப்பிடத்தக்கது.