தளபதி 67 திரைப்படத்தில் மேலும் ஒரு மாஸ் நடிகர் வில்லனாக நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 3ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67 இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
தளபதி 67 படத்தில் 6 வில்லன்கள் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகின்றது. கேஜிஎப்-2 படத்தின் வில்லன் பாலிவுட் நடிகை சஞ்சய் சத், மலையாள நடிகர் பிரித்திவிராஜ் உள்ளிட்ட 6 நடிகர்கள் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுனும் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. ஆறு வில்லன்களில் மூன்று பேர் வெயிட்டான பாட்டிகளாக இருக்கின்றார்கள். லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் வில்லன் தான் அதிகம் ஸ்கோர் செய்வார்கள். இந்த நிலையில் ஆறு பேர் இருந்தால் விஜய் அண்ணா என்ன செய்வார் என்கின்றார்கள் ரசிகர்கள். மேலும் அர்ஜுன் எல்லாம் ஈசியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விடுவாரே என கூறி வருகின்றார்கள்.