தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக படமாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ரகுமான், சரத்குமார், விக்ரம் பிரபு, பார்த்திபன், ஜெயராமன், த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் தற்போது படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நடிகை திரிஷா சமீபத்தில் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது தொகுப்பாளி த்ரிஷாவிடம் நீங்கள் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு த்ரிஷா இப்போது பொன்னியின் செல்வன் படம் குறித்து தான் பேச சொல்லி இருக்கிறார்கள் என்று கூறினார். ஆனால் தளபதி 67 திரைப்படத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் நடிகை திரிஷா விஜய்க்கு ஜோடியாக கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.