தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றை கட்டுவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதுமாக மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியது.இந்நிலையில் நாளை மறுநாள் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் இன்று முதல்வர் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து கட்டுப்படுத்த வரும் திங்கள்கிழமை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்த உள்ளது. இதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அலுவலங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மக்களுடைய நிதி நிலைமையை கருத்தில் கொண்டு வங்கிகளில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் கொண்டு இயங்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.