Categories
மாநில செய்திகள்

தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு…? – இன்று அவசர ஆலோசனை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் பலனாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் தொற்று குறையவில்லை. எனவே ஊரடங்கு தளர்த்துவதா? வேண்டாமா? என்பது குறித்தும், ஊரடங்கை நீட்டித்தால் என்னென்ன தளர்வுகள் வழங்கலாம் என்பது குறித்து தலைமை செயலாளர் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.

மேலும் கொரோனா அதிகரித்துள்ள கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கவும், கொரோனா குறைந்துள்ள மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கவும், தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |