நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி வருகின்றது. மேலும் ஒரு சில மாநிலங்களில் கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தி வருவதால் நோய்த்தொற்று குறைந்து வருவதாக அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் கேரளாவில் அமலில் இருக்கும் ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில் கொரோனாவின் தாக்கம் குறைய காரணத்தினால் ஜூன் 16 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். ஜூன் 12,13 இல் கடும் கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும், அத்தியாவசிய கடைகள் வழக்கம்போல செயல்படும். வங்கிகள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.