முதியவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நடுப்பட்டி கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரவு நேரத்தில் அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு அருகே மது போதையில் தள்ளாடியபடி நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சேகர் கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்துவிட்டார். இதனை அடுத்து மறுநாள் காலை சேகரின் சடலம் கிணற்றில் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.