101 வயதுடைய பெண்மணி ஒருவர் கொரோனோவிற்கான தடுப்பூசியை முதன் முதலில் போட்டுள்ளார்.
ஜெர்மனி புதிய கொரோனா வைரஸிற்க்கு எதிரான தடுப்பூசி போடும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. ஆனால் இது தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பே சாக்ஸோனி அண்ட் ஹால் என்ற மாநிலத்தில் பயோ என்டர்பிரைசஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுவிட்டது. மேலும் சாக்ஸோனி அண்ட் கால்டு என்ற பகுதியில் உள்ள ஒரு நர்சிங் ஹோமில் இருக்கும் 101 வயதான பெண்மணி கொரனோ வைரஸ்ஸிற்கு எதிரான தன் முதல் தடுப்பூசியை போட்டுள்ளார். மேலும் இவர்தான் ஜெர்மனியில் தடுப்பூசி போட்ட முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சாக்ஸோனி அண்ட் ஹால் என்ற பகுதியில் எடித் குய்செல்லா என்ற 101 வயதான பெண்மணி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி பெறும் முதல் நபர் ஆவார். மேலும் இக்குடியிருப்பில் உள்ள குடியிருப்பாளர்கள் 40 பேருக்கும் ஊழியர்கள் 10 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 50 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் தான் இந்த நர்சிங் ஹோமில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் தான் முதன்முதலில் தடுப்பூசி போடப்படும் என்று ஜெர்மன் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.