Categories
மாநில செய்திகள்

தள்ளிப்போகும் செமஸ்டர் தேர்வு…. வேலைக்கு சேருவதில் சிக்கல்…. சிக்கி தவிக்கும் கல்லூரி மாணவர்கள்….!!!!

தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் கேம்பஸ் வேலைவாய்ப்பு பெற்ற இன்ஜினியரிங் மாணவர்கள் வேலையில் சேர்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் செமஸ்டர் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கவலையடைந்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை வளாகத்தில் மட்டும் பல்வேறு தனியார் பெருநிறுவன பணிகளுக்கு கேம்பஸ் இன்டர்வியூ நடந்தது. அதில் 1700 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த நான்கு ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு கணினி தொடர்பான நிறுவனங்கள், அதிக அளவில் மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகளிலும் நடைபெறாமல் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் இறுதியாண்டு படிக்கும் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு ஏப்ரல் மாதம் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் மாணவர்கள் பட்டம் பெற முடியும். அதன் பிறகே அவர்கள் தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்திற்கு பணிக்குச் செல்ல முடியும். மேலும் வேலைக்கு தேர்வு செய்யும் நிறுவனங்கள் அனைத்தும், தங்களின் வேலைவாய்ப்பு உத்தரவை வழங்கும் போதே ஆகஸ்ட் மாதத்திற்குள் பட்டம் பெற்று வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என்று கூறுகின்றனர்.

தற்போது இருக்கும் சூழலில் இந்த கால கெடுவுக்குள் இறுதி செமஸ்டர் தேர்வு முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் சரியான நேரத்தில் பணியில் சேர முடியுமா அல்லது வேலை வாய்ப்பு பறிபோகுமா என்ற மாணவர்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். எனவே இறுதியாண்டு மாணவர்களுக்கு விரைவில் தேர்வுகளை முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Categories

Tech |