Categories
தேசிய செய்திகள்

தள்ளிப்போகும் தொடக்கப் பள்ளிகள் திறப்பு… வெளியான உறுதியான தகவல்… மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தொடக்கப் பள்ளிகளை திறப்பது குறித்து கர்நாடக அரசு முக்கிய முடிவினை எடுத்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் அம்மாநிலத்தில் தற்போது ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு 50 சதவீத மாணவர்கள் சுழற்சிமுறையில் பள்ளிகளுக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது எப்போது என்று தொடர்ந்து கேள்வி எழுந்து வருகிறது. இது தொடர்பாக கர்நாடக மாநில அரசு அமைத்துள்ள கொரோனா தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

இதில் முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது, அதில் குழந்தைகளுக்கு அதிக அளவில் தொற்று ஏற்படவில்லை. தற்போது வைரஸ் காய்ச்சல் போன்றவைதான் காணப்படுகிறது. இது ஆண்டுதோறும் ஆகஸ்ட் செப்டம்பரில் வரக்கூடிய ஒன்றுதான். எனவே ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அக்டோபர் 15-ஆம் தேதி முடிவுகள் தெரிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் பள்ளிக்கு மாணவர்கள் வருவதை கட்டாயமாக்க கூடாது. வருகை பதிவேடு அவசியமில்லை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

மேலும் NCEE-ன் உறுப்பினர்களா நிரஞ்சன் ஆரத்யா மற்றும் குருமூர்த்தி காசிநாதன் ஆகியோர் கர்நாடக மாநில கல்வி துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் குழந்தைகளின் ஊட்டச்சத்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் மீதான வன்முறை, குழந்தைகள் திருமணம் உள்ளிட்டவை அதிகரித்து வருகின்றது. இதனை மனதில் கொண்டு மாநில அரசு அவசர முடிவு எடுக்க வேண்டும். பள்ளிகளை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |