தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்தத் தேர்தலின் போது நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
இதையடுத்து விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் 2021 ஆம் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மார்ச் அல்லது மே மாதத்தில் நடத்த தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. தமிழகத்தில் ஒரு மாத காலமாக பெய்து வரும் கனமழை மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலை கருத்தில்கொண்டு உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைப்பதாக தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.