பள்ளி கல்லூரிகள் திறக்கும் தேதி தள்ளி போவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது
தமிழகம் முழுவதும் கொரோனா பரவ தொடங்கியதையடுத்து மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 16-ம் தேதி பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்தது. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி திறக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பள்ளிகளை திறப்பதற்கு இது சரியான தருணம் இல்லை என பல கருத்துக்கள் எழுவதால், முதல்வர் திடீரென கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதாகவும் பருவமழையும், பரவும் கொரோனா என இரண்டையும் கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரி திறப்பு தள்ளி வைக்க யோசிப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.