Categories
மாநில செய்திகள்

தள்ளிப் போகிறதா பொதுத்தேர்வு…..? பள்ளிக் கல்வித்துறையின் முக்கிய முடிவு….!!!

மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் பொதுத்தேர்வு குறித்து முக்கிய ஆலோசனை நாளை நடைபெற உள்ளது .

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. சமீபத்தில் திருநெல்வேலியில் பள்ளியின் கழிவறை சுற்றுசுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து சேதமடைந்த பள்ளியில் இருக்கும் கட்டிடங்கள் இடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதேசமயம் காலதாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களின் சுமையைக் குறைப்பதற்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. இவை அனைத்தும் உரிய நேரத்தில் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது. இதில் செய்முறைத் தேர்வு பிப்ரவரி மாதம் நடத்துவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. மேலும் பொது தேர்வு நடத்துவதற்கு நல்ல நிலையில் உள்ள கட்டிடங்களை தயார் செய்ய வேண்டும் என்றும்,  மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வுகள் நடத்தலாமா? அல்லது தள்ளி நடத்தலாமா? என்றும் ஆலோசனை நடத்துகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை 2 முறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அதுமட்டுமில்லாமல் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் தற்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு புறமிருக்க மற்றொரு புறம் ஒமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் முக கவசம் அணிதல், சீரான சமூக  இடைவெளியை பின்பற்றுதல், கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் தீவிரமானால் கட்டாயம் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தவும் வாய்ப்புள்ளது.  அப்படி இருக்க தற்போது அரையாண்டு விடுமுறையில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஜனவரியில் மீண்டும் பள்ளி திறக்க முடியாத சூழல் ஏற்படும். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு முடிவு எடுக்க வேண்டிய சூழலில் பள்ளி கல்வித்துறை தற்போது உள்ளது. இதனால் நாளை ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |