Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தவணை தொகை கட்ட முடியவில்லை” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சோட்டப்பணிக்கன் தேரிவிளை பகுதியில் கட்டிட தொழிலாளியான பால் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார் டிரைவரான மனோஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மனோஜ் தவணை முறையில் புதிதாக ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கியுள்ளார். ஆனால் அதற்கான தவணை ரூபாயை மனோஜால் கட்ட முடியவில்லை. இதனால் வீட்டில் உள்ளவர்களிடம் தவணை தொகை கட்டுவதற்காக மனோஜ் பணம் கேட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் பணம் கொடுக்காததால் மன உளைச்சலில் இருந்த மனோஜ் தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த மனோஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மனோஜ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |