ஷிகர் தவான் உடன் இவர் ஓப்பனிங் வீரராக களம் இறங்கினால் நன்றாக இருக்கும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்..
ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது இந்திய அணி. இந்த தொடர் ஆகஸ்ட் 18, 20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தலைநகர் தலைநகர் ஹராரேயில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி கட்டத்தில் கே.எல் ராகுல் கேப்டன் ஆக செயல்பட வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்தது.
இந்நிலையில் கேல் ராகுல் மற்றும் பயிற்சியாளரான வி.விஎஸ் லட்சுமணன் ஆகியோரின் தலைமையில் ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி தொடரை வெல்ல தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் (கேப்டன்) இளம்வீரர்களை வைத்து முதல் வொயிட்வாஷ் செய்து முதல் முறையாக வரலாற்று சாதனை படைத்தது இந்தியா.
அந்த தொடரில் இடம் பெற்ற பெரும்பாலான இளம் வீரர்கள் இந்த தொடரிலும் விளையாடுகின்றனர் அவர்கள் நல்ல பார்மில் புத்துணர்ச்சியுடன் இருக்கின்றனர். இந்தியாவை விட ஜிம்பாப்வே பலத்தில் குறைவு என்பதால் அந்த அணியை சொந்த மண்ணில் தோற்கடித்து கோப்பையை இந்திய அணி வெல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் கடைசியாக வங்கதேச அணிக்கு எதிராக நடந்த ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் ஜிம்பாப்வே அணி அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்தி 2 கோப்பையை வென்றது.. எனவே அந்த அணியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏற்கனவே இந்தியா அணிக்கு எதிராக நாங்கள் போராடுவோம் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இந்நிலையில் கடைசி நேரத்தில் கே.எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டதால் அவரே தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என்று தெரிகிறது.. ஏனென்றால் கடந்த சில மாதங்களாக காயத்தால் அவதியடைந்து வந்த அவர் தற்போது குணமடைந்து மீண்டுள்ளதால் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பைக்கு முன்பாக பார்முக்கு வருவதற்கு ஓப்பனிங் இடத்தில் களமிறங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே கே எல் ராகுல் உடன் தவான் மற்றொரு ஓப்பனிங் பேட்டராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஓப்பனிங் இடத்தில் ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பு கிடைக்காத நிலைமை ஏற்பட்டிருக்கிறது..
குறிப்பாக சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அபாரமாக பேட்டிங் செய்த இளம் வீரர் சுப்மன் கில் மூன்று போட்டிகளில் 205 ரன்கள் 102.50 என்ற சராசரியில் வெளுத்து வாங்கி உள்ளார். இவரது இந்த ஆட்டம் இந்தியாவிற்கு வெற்றியை கொடுத்தது. அந்த தொடரில் அவர் தொடர் நாயகன் விருது வென்ற போதிலும், இந்த தொடரில் அவருக்கு அதே இடத்தில் களமிறங்க வாய்ப்பு கிடைக்காத நிலைமை இருக்கிறது.
இந்நிலையில் கேப்டனாக கேஎல் ராகுல் இருப்பதால் தொடக்க விழாவாக களமிறங்குவது அவருடைய விருப்பம் அவரது முடிவு என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் அளித்த பேட்டியில், ஒரு கேப்டனாக கே. ராகுல் அணியின் நலனை விரும்பினால் சுப்மான் கில் போன்ற ஒரு நல்ல ஃபார்மல் இருக்கும் ஒரு வீரருக்கு அவர் ஓப்பனிங் இறங்க வாய்ப்பு வழங்க வேண்டும். ராகுல் இதற்கு முன்னதாக ஒரு நாள் கிரிக்கெட்டில் 5ஆவது இடத்தில் களம் இறங்கி ஆடி இருக்கிறார்..
ஆசிய கோப்பைக்கு முன்பாக பயிற்சி எடுக்க அவர் விரும்பினால் இந்த தொடரில் ஓப்பனிங் வீரராக களம் இறங்கி ஆடலாம்.. ஆனால் இதற்கு முன்னதாக அவர் ஐந்தாவது இடத்தில் ஆடி இருக்கிறார் என்பதை அவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மறுபக்கம் நல்ல பார்மில் கில் இருக்கிறார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஷிகர் தவனுடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு உதவி இருக்கிறார். கில் மற்றும் தவான் இரண்டு பேருமே நல்ல பார்மில் உள்ளனர்..
எனவே அவர்கள் இருவரும் தொடக்க வீரராக ஆடலாம்.. மூன்றாவது இடத்தில் ராகுல் விளையாடலாம்.. ஒருவேளை சமீபத்தில் காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருந்த கே எல் ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி விளையாட விளையாட விரும்பினால் அவர் கேப்டனாக இருப்பதால் தமது விருப்பப்படியே செய்யலாம்.
ஆனால் நான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிய தவான் மற்றும் கில் ஆகிய இருவரும் தொடக்க வீரராக களமிறங்குவதை பார்க்க விரும்புகின்றேன். ராகுல் 3ஆவது இடத்தில் விளையாடலாம் என்று தெரிவித்துள்ளார்.