பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பேட்டை மெயின் ரோட்டில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அந்தப் பெண் ராமகிருஷ்ணனை கண்டித்துள்ளார். அப்போது ராமகிருஷ்ணன் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.