Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தவறாக நடந்து கொண்ட 2ஆவது கணவர்…. சொல்லியும் கண்டு கொள்ளாத தாய்… இருவரையும் தூக்கிய போலீஸ்…!!

வேலூர் மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய், 2 ஆவது கணவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், சலவன்பேட்டை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியின் தந்தை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் சிறுமியின் தாயார் வேறொரு நபரை இரண்டாவதாக கல்யாணம் செய்து கொண்டார். அதன்பின் அந்த நபர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சிறுமி தாயாரிடம் தெரிவித்தும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. இத்தகவலை அறிந்த உறவினர்கள் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இப்புகாரின் பேரில் தாய் மற்றும் அவரது இரண்டாவது கணவர் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |