மீனவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கந்தன்பாளையத்தில் மீனவரான பன்னீர்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் கூலி தொழிலாளியான குமார்(56) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது மகனை யாரோ அடித்து விட்டதாக கூறி பன்னீர் தெருவில் நின்று திட்டி கொண்டிருந்தார். அப்போது தன்னை திட்டுவதாக நினைத்து குமார் பன்னீருடன் தகராறு செய்துள்ளார். மேலும் மரப்பலகையால் குமார் பன்னீரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
இதனால் காயமடைந்த பன்னீரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பன்னீர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமுறைவாக இருக்கும் குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.