ட்விட்டரில் Liz trussel என்ற பெண் ஒருவரை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் என்று மக்கள் தவறாகிய கருதியதை அடுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் இருந்து வாழ்த்து செய்திகளை அனுப்பி இருக்கின்றார்கள். ஸ்வீடனின் பிரதமர் மாக்டலினா ஆண்டர்சன் ஒரு வீட்டில் அவர் தவறாக டேக் செய்யப்பட்டதால் குழப்பம் தொடங்கியுள்ளது. அதாவது ஸ்வீடன் பிரதமர் மாக்டலினா ஆண்டர்சன் திங்கள்கிழமை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கிரேட் பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்கும் லிஸ்டர்ஸ்க்கு வாழ்த்துக்கள் ஸ்வீடன் மற்றும் கிரேட் பிரிட்டன் எங்கள் ஆழ்ந்த மற்றும் விரிவான ஒத்துழைப்பை தொடரும். மேலும் இது எங்கள் குடிமக்கள் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கு முக்கியமானது என தனது வாழ்த்துக்களை பதிவிட்டு இருக்கிறார்.
ஆனால் அவர் 2009 இல் இருந்து Liz trussel சொந்தமான லிஸ் ட்ர்ஸ் ஐடியை தெரியாமல் குறிப்பிட்டு இருக்கிறார். Trussel க்கு சில மாதங்களுக்குப் பின் ட்விட்டரில் இணைந்த truss ,@trussliz எனும் ட்விட்டர் ஐடியை எடுக்க வேண்டி இருந்தது. மேலும் இந்த ட்விட்டர் பதிவிற்கு பின் நடைபெற்ற இன்னொரு வேடிக்கை என்னவென்றால் ஸ்வீடன் பிரதமர் ஆண்டர்சனின் வாழ்த்துக்கு அந்த பெண் பதில் அளித்து இருக்கின்றார். அதில் விரைவில் சந்திப்போம் விருந்துக்கு தயார் செய்யுங்கள் என்பது போல எழுதி இருக்கின்றார். இது பற்றி தெரிய வந்ததும் ஸ்வீடன் பிரதமர் மாக்டலினா ஆண்டரசன் தனது வாழ்த்து செய்தியை மீண்டும் சரியான ஐடியுடன் பதிவிட்டு இருக்கிறார். மேலும் இதே போன்ற தவறை பிரித்தானியாவின் பசுமை கட்சி எம்பி கரோலின் லூகாஸின் செய்திருக்கின்றார். ஆனால் அவர் பின் மன்னிப்பு கேட்டுள்ளார் தலைமை போட்டியில் 80 ஆயிரம் வாக்குகள் பெற்று ரிஷி சுனக்கை தோற்கடித்த டிரஸ் பிரித்தானிய வரலாற்றில் மூன்றாவது பெண் பிரதமர் ஆனார்.