Categories
உலக செய்திகள்

தவறான கருத்தை பதிவு செய்த ‘பர்கர் கிங்’… ட்விட்டரின் கிழித்து தள்ளிய நெட்டிசன்கள்..!!

லண்டன் மாநகரில் புகழ்பெற்ற ‘பர்கர் கிங்’ உணவு நிறுவனம் மகளிர் தினத்தன்று வெளியிட்ட ட்வீ ட்டர் பதிவிற்கு ,பெரும்பாலும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து ‘பர்கர் கிங்’ நிறுவனம் தனது ட்வீட்டை  நீக்கியது.

சர்வதேச மகளிர் தினத்தன்று பிரபல உணவு நிறுவனம் ‘பர்கர் கிங் ‘தனது ட்வீ ட்டர் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளது. அந்தச் ட்வீட்டில்  ‘பெண்கள் அனைவரும் சமையலறைக்கு சொந்தமானவர்கள் ஆவர் ‘என்று பதிவிட பட்டிருந்தது. இந்தக் கருத்திற்கு நெட்டிசன்கள் மத்தியிலும் ,பெண்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாக அந்த நிறுவனம் தனது ட்வீட்டை அழித்துள்ளது.

இந்த நிறுவனம் மார்ச் 8 தேதி நியூயார்க் டைம்ஸ் என்ற நாளிதழுக்கு அளிக்கப்பட்ட விளம்பரத்தில், இதே கருத்தையே குறிப்பிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அமெரிக்காவிலுள்ள உணவகங்கள் அனைத்திலும் ’24 சதவீதம் மட்டுமே பெண்கள் உள்ளனர்’ என்றும் ‘சமையலறைக்கு பெண்கள் மட்டுமே சொந்தம் ஆவார்கள்’ என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த கருத்துக்கள் அனைத்தும் சமையலறைக்கும் பெண்களை முடக்கிப்போடும் அடிமைத்தனமாக உள்ளதாக பல தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |