Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தவறான சிகிச்சையால் பறிபோன பார்வை…. அதிர்ச்சியடைந்த பெண்….. போலீசில் புகார்….!!!!

கடலூரை சேர்ந்த பெண் ஒருவர், மூக்கில் சதை வளர்ந்ததால் அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்த பின்பு, அந்த பெண்ணின் பார்வை பறிப்போயுள்ளது. மருத்துவர்களிடம் விசாரித்த போது இரத்த கட்டியினால் கண் பார்வை தெரியாமல் இருப்பதாகவும், கொஞ்ச நாளில் சரியாகிவிடும் எனவும் மருந்துகள் கொடுத்து அனுப்பியுள்ளனர்.

ஆனால் அந்த பெண்ணிற்கு கண் பார்வை சரியாகாத நிலையில், தனியார் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் எடுத்து பார்த்ததில் நரம்பு துண்டிக்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் தனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மீது காவல்துறையில் புகாரளித்துள்ளார்.

Categories

Tech |