தவறான சிகிச்சை அளித்ததால் முகம் வீங்கி போனதை அடுத்து மருத்துவர் மீது வழக்கு தொடர இருப்பதாக ஸ்வாதி தெரிவித்துள்ளார்.
சிகிச்சை பெறுவதற்காக கன்னட நடிகை ஸ்வாதி சதீஷ் ரூட் கனால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றபோது முகம் வீங்கி போனது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முகம் வீங்கி போனதனால் தனக்கு படம் மட்டும் சீரியல் வாய்ப்பு போய்விட்டதே சுவாதி கூறினார் ஆகையால் தனக்கு தவறாக சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்தார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, எனக்கு சிகிச்சை அளித்த பல் மருத்துவர் சோடியம் ஹைபோக்ளோரைட் கொடுத்த பிறகு அனஸ்தீசியா கொடுத்தார். முதலில் அனஸ்தீசியா கொடுத்துவிட்டு சோடியம் ஹைபோக்ளோரைட் கொடுத்திருக்க வேண்டும் என்று நான் ஆலோசனை கேட்ட மற்றொரு மருத்துவர் கூறினார் என தெரிவித்திருக்கிறார்.
இதுபற்றி சுவாதிக்கு சிகிச்சையளித்த மருத்துவர் கூறியுள்ளதாவது, சுவாதி மாறி மாறி பேசுகின்றார். மேலும் அவர் ஆதாரமில்லாமல் புகார் கொடுக்கின்றனர். முதலில் நான் சாலிக் ஆசிட் கொடுத்தேன் என்கின்றார். பின் சாலிசிலிக் ஆசிட் கொடுத்தேன் என்கின்றார். பல் மருத்துவத்தில் இந்த இரண்டையுமே பயன்படுத்த மாட்டோம் என கூறியுள்ளார்.