Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள்…. பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு…. பரபரப்பு….!!!!!

ஈரோடு மாவட்டம் சாஸ்திரி நகர் கல்யாணசுந்தரி வீதியில் வசித்து வந்தவர் முருகன். இவரது மனைவி ஜீவா (45) ஆவார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். இவர்களில் முருகன் இறந்து விட்டதால் வீட்டுவேலை செய்து குடும்பத்தை ஜீவா நடத்தி வருகிறார். சென்ற சில தினங்களுக்கு முன் ஜீவாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் ஈரோட்டிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் ஜீவாவுக்கு கர்ப்பப்பையில் கட்டி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கடந்த 30ஆம் தேதி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். இருப்பினும் அவருக்கு உடல்நலம் சீராகவில்லை. இதன் காரணமாக ஜீவாவை மேல் சிகிச்சைக்காக சேலம் (அல்லது) கோவை அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லும்படி மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் ஜீவாவின் தங்கையான அமுதா ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஜீவா எழுதி கொடுத்த ஒரு புகார் மனுவை கொடுத்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது “எனக்கு உடல்நலகுறைவு ஏற்பட்டதால் தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்றேன். அப்போது எனக்கு கர்ப்பப்பையில் கட்டியிருப்பது தெரியவந்தது.

என்னிடம் பணம் இல்லாத காரணத்தால் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தேன். அங்கு  எனக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகும் என் உடல்நலம் சீராகவில்லை. இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது அறுவை சிகிச்சை செய்யும்போது சிறுதவறு நடந்துவிட்டதாகவும், அதற்கு ஈரோடு அரசு மருத்துவனையில் சிகிச்சையளிக்க முடியாததால் சேலம் (அல்லது) கோவை அரசு மருத்துமனைக்கு சென்று சிகிச்சை பெறுமாறும் அலட்சியமாக பதில் அளித்தனர். ஆகவே தவறான சிகிச்சையளித்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு எனக்கு தகுந்த மருத்துவ உதவி அளிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் ஜீவா குறிப்பிட்டுள்ளார்.

 

Categories

Tech |