Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தவறான சிகிச்சை குடுத்து இப்டி பண்ணிட்டாங்க… நடவடிக்கை எடுங்க… சிவகங்கையில் பரபரப்பு சம்பவம்..!!

சிவகங்கையில் தவறான சிகிச்சையால் மாணவி உயிரிழந்ததாக உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சக்கந்தி காந்திநகர் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு திவ்யஸ்ரீ என்ற மகள் இருந்தார். திவ்யஸ்ரீ பதினொன்றாம் வகுப்பை சிவகங்கையில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று திவ்யஸ்ரீக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை சிகிச்சைக்காக சிவகங்கை தனியார் மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த மாணவியின் உடல்நிலை திடீரென மோசமானது.

இதையடுத்து அங்கிருந்து மாணவி மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த வழியிலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மாணவியின் தந்தை தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான் தனது மகள் உயிரிழந்ததாகவும், அதற்கு காரணமான அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்பின் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் மாணவி இறந்ததற்கான காரணம் என்னவென்று தெரிவிக்க வேண்டும், மேலும் தனியார் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவியின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் மாணவியின் உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அதற்கும் பிடிகொடுக்காமல் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து திரும்பி சென்று விட்டனர்.

Categories

Tech |