தமிழகத்தில் திமுகவின் ஓராண்டு சாதனைகளை கலாய்க்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மின்வெட்டு பிரச்சினை குறித்து டுவிட்டரில் கலாய்த்தார். அதற்கு செந்தில் பாலாஜி கடுமையாக பதில் அளித்திருந்தார். இந்நிலையில் மணிபால் குளோபல் கல்வி நிறுவனத்தின் தலைவர் மோகன் தாஸ் பாய் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், சர்ச் மசூதிகளில் மின் கட்டணம் மிகக் குறைவாக யூனிட்டிற்கு ரூ.2.85 வசூலிக்கப்படுகிறது என்றும் கோவில்களில் யூனிட்டிற்கு ரூ.8 வசூலிக்கப்படுகிறது என்றும் அதில் பதிவிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து மக்களை இது உண்மையா? தமிழகத்தில் கோவில்களும், இந்துக்களும் பாகுபாடு காட்துகிறதா? அப்படியானால் இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று அவர் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்து செந்தில்பாலாஜி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், அதில், இது போன்ற தவறான தகவல்களை பகிராதீர்கள். கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டு தலங்களின் கீழ் எந்த பாகுபாடு இல்லாமல் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வழிபாட்டு தலங்களுக்கு குறைந்தபட்சமாக ஒரு யூனிட்டுக்கு ரூ