Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தவறான பாதையில் இளைஞர்கள்…! பள்ளி சிறுவனை கட்டாயபடுத்தி போதைப்பொருள்…. கொடூரத்தின் உச்சம்….!!!!

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளிக்கு  சொந்தமான வேன் ஒன்று பாவூர்சத்திரம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் பள்ளி சிறுவன் ஒருவனை வேனிற்க்குள் அழைத்து அந்த சிறுவனுக்கு போதை பொருளை பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதை சிறுவன் தன்னுடைய வாயில் வைத்து விட்டு வலியால் துடித்த பிறகு அதனை தூக்கி எறிந்ததும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் நாவல்குளத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஈடுபட்டதும் அவர்கள் மூன்று பேரும் 17 வயது மாணவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. பின்னர் அவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர் இதனால் பல குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |