பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் நிலையை குறித்து வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களானது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு கொலை போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது என்பது அதிர்ச்சிக்குரிய விஷயம் ஆகும். மக்களும் அரசும் இதை எளிதில் கடந்து செல்ல முடியாத ஒன்றாகும். வளரும் குழந்தைகள் பிஞ்சிலே நஞ்சாக மாறுவது மிகவும் வருந்தத்தக்கதாகும்.தமிழக அரசானது அரசு இதை தடுக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சென்னையில் சிறார்களை நல்வழிப்படுத்துவதில் காவல் சிறார் மன்றங்கள் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் தற்பொழுது இந்த பள்ளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து கொண்டே வருகிறது. சிறுவர்களுக்கு விளையாட்டு மற்றும் அவர்களுக்கு இயல்பாக உள்ள கல்வி மற்றும் கடல் சார்ந்த திறமைகள் அனைத்தையும் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசும் சமுதாயமும் குழந்தைகள் தவறான வழியில் செல்வதை தடுத்து அவர்களை முன்னேற்ற பாதையில் பயணிக்க உறுதி ஏற்று நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.