பிரிட்டன் இளவரசரின் மனைவியை விமர்சித்த ஆஸ்திரேலியா எம்பியால் சர்ச்சை நிலவி வருகிறது.
இளவரசர் ஹாரியின் மனைவி மேகன். மேகன் ஓப்ராவுடன் நடைபெற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் பிரிட்டனில் முடியாட்சி குறித்து தவறாக பேசியது மட்டுமல்லாமல் சரமாரியாக குற்றம் சாட்டியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மேலும் பிரித்தானியாவின் அடுத்த இளவரசர் ஹரி இல்லை வில்லியம் தான் என்று மேகன் மெர்க்கலிடம் கூறியதற்கு பின்னரே இந்த பிரச்சினை ஆரம்பமாகியது.
இந்நிலையில் நேர்காணல் நிகழ்ச்சி முடிந்து இரண்டு நாட்களுக்கு பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியால் அமெரிக்கா எம்பி jarrod bleijie கடும் விமர்சனத்திற்குள்ளானார். தவறான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து விட்டோமோ என்று நினைத்த மேகன் அடுத்த ராணியாக முடியாவிட்டால் கண்டிப்பாக அரச குடும்பத்தை அழிக்க முயற்சிப்பார் என ஆஸ்திரேலியா எம்பி Jarrod bleijie மேகன் குறித்து சர்ச்சையான வார்த்தைகளை வெளியிட்டுள்ளார்.