Categories
தேசிய செய்திகள்

தவறான விளம்பரம்…. வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்… ரூ.50 லட்சம் அபராதம்….!!!!!!

தவறான விளம்பரங்களை தடை செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.

நுகர்வோருக்கு பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தவறாக வழிகாட்டும் விளம்பரங்கள் மற்றும் அவற்றுக்கு பதில் அளிப்பதை தடை செய்யும் விதமாக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய நுகர்வோர் நலத்துறையின் கீழ் உள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டிருக்கின்றது. மக்களை தவறாக வழிநடத்தும் தொலைக்காட்சி விளம்பரங்களை தயாரிப்பவர்களுக்கு 50 லட்சம் வரை அபராதம் விதிக்க அதில் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்குவது பற்றியும் அதில் வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆதாரமில்லாத உரிமை கோரல்கள், மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகளை அழித்தல், தவறான தகவல்களை அளித்தல் போன்றவற்றால் நுகர்வோர் ஏமாற்றபடாமல் இருப்பதை இந்த வழிகாட்டு நெறிமுறைகளை உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற பொருட்களுக்கு எதிராக பாதுகாத்துக் கொள்ளும் உரிமை சேவைகளுக்கான உரிமை என பல்வேறு உரிமைகளை மீறும் உற்பத்தியாளர்கள் விளம்பரம் செய்வோர் தவறாக வழிகாட்டும் விளம்பரங்களுக்கு ஒப்புதல் வழங்குவோர் போன்றோருக்கு 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் அதில் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும் உற்பத்தியாளர், சேவை வழங்குனர், விளம்பரதாரர் மற்றும் விளம்பர முகவர் போன்றோரின் கடமைகள் பற்றியும் வழிகாட்டு நெறிமுறைகள் வரையறுக்கப்படுகின்றன. விளம்பரங்கள் வெளியிடப்படும் விதத்தில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் தெளிவை கொண்டுவருவது மூலமாக நுகர்வோரின் நலனை பாதுகாப்பதை வழிகாட்டுதல்கள் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன.

இதனால் நுகர்வோர் தவறான விவரிப்புகள் மற்றும் மிகைப்படுத்தல் உண்மைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க முடிகின்றது எனவும் இது பற்றி வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அச்சு தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் போன்ற அனைத்து தளங்களிலும் வெளியிடப்படும் விளம்பரங்களில் வழிகாட்டுதல்கள் பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது. e-commerce தளத்தில் போலியான மதிப்புகளை தடுக்க தொழில்துறை பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வழிகாட்டுதல்களை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |