ஊரடங்கு காலத்தில் வங்கி கடனை தவறாமல் செலுத்தியவர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கும் விதமாக வட்டியில் குறிப்பிட்ட தொகையை திருப்பி அளிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக EMI வசூலிப்பதை 6 மாதம் வரை நிறுத்தி வைத்துள்ள நிலையில் சில வங்கிகள் பணத்தை கட்ட வாடிக்கையாளர்களை நிர்பந்தம் செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வட்டிக்கு வட்டி போடும் முறையை ரத்து செய்ய முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் வங்கி கடனை தவறாமல் செலுத்தி கடன்தாரர்களுக்கு ஊக்கத் தொகையை வழங்க ரிசர்வ் வங்கி ஆளுமையின்கீழ் உள்ள வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.
அதில் இரண்டு கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தவறாமல் தவனை செலுத்தியவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கான சாதாரண மற்றும் கூட்டு வட்டிக்கு இடையிலான வித்தியாசத்தை ஊக்கத் தொகையாக வழங்க உத்தரவிட்டுள்ளது